அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாராளுமன்றத்தில் அலட்சியப்படுத்தப்படும் தமிழ் மொழி

Go down

பாராளுமன்றத்தில் அலட்சியப்படுத்தப்படும் தமிழ் மொழி Empty பாராளுமன்றத்தில் அலட்சியப்படுத்தப்படும் தமிழ் மொழி

Post by theepan Fri Feb 25, 2011 9:19 pm

இலங்கையின் பாராளுமன்றத்திற்குள்ளேயே பரவலான அளவில் தமிழ் மொழியை அலட்சியப்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் ஆதாரபூர்வமாக குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக பாராளுமன்ற ஆவணங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ்மொழிக் கொலைகள் கடுமையாக இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். அவற்றிலுள்ள தமிழைப் பார்த்தால் அது என்னவோ வேறு மொழி என்பது போலவே பிழையான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எடுத்துக்காட்டாக பாராளுமன்ற மருத்துவப் பிரிவினால் வழங்கப்படும் மாத்திரை உறைகளில் கடுமையான தமிழ்ப் பிழைகள் இருப்பதாக அறிய முடிகின்றது. அவற்றில் அச்சிடப்பட்டிருக்கும் தமிழ் மொழியை வாசித்தால் குமட்டிக் கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது.
நாட்டின் அதியுயர் சட்டவாக்க நிறுவனமான பாராளுமன்றத்திலேயே நிலைமை இவ்வாறென்றால் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களின் நிலை குறித்து சொல்ல வேண்டியதில்லையல்லவா?
அதிலும் குறிப்பாக பாராளுமன்றத்தில் தமிழ் உரைபெயர்ப்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தும் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது குறித்து பலரும் விசனத்துடன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின
» யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
» தமிழ் தேசத்தாய் பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அழைப்பு - த.தே. கூட்டமைப்பு
» சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு லண்டனில் நடைபெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum