அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும்

Go down

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Empty தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும்

Post by thadcha Tue Mar 15, 2011 7:23 pm



குடிநீரை சுத்தப்படுத்த இனி வாழைப்பழ தோல் போதுமாம். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீரில் காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில் தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும் அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை.

தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளை விட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum