அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தெரிந்து கொள்ளுங்கள்... ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்றவர்

Go down

தெரிந்து கொள்ளுங்கள்... ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்றவர் Empty தெரிந்து கொள்ளுங்கள்... ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்றவர்

Post by devid Thu Dec 09, 2010 10:20 pm

ஒலிம்பிக் போட்டிகளில் தட, களத்தில் 4 முறை பதக்கம் வென்றவர் டிரினிடாட் டொபாகோ ஓட்டப்பந்தய வீரர் அடோ போல்டன். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை இன்றளவும் தக்கவைத்திருப்பவர்.

போல்டன், டிரினிடாட் டொபாகோ தலைநகர் போர்ட்-ஆப்-ஸ்பெயினில் 1973-ம் ஆண்டு பிறந்தார். தனது 14 வயதில் அமெரிக்கா சென்ற போல்டன் நியூயார்க்கில் உள்ள ஜமைக்கா உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பள்ளியில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தார். போல்டனின் பயிற்சியாளர் அவரிடமிருந்த அதிவேக ஓட்டத்திறனை கவனித்து, தட களத்தில் ஈடுபட ஊக்குவித்தார்.

1992-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டிரினிடாட் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கத் தேர்வானார். ஆனால், இரு பிரிவுகளிலும் முதல் சுற்றிலேயே தோல்வியுற்றார். அதே ஆண்டு சியோலில் நடந்த உலக ஜூனியர் தட கள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் பிரிவுகளில் பட்டம் வென்றார். இதன் மூலம் ஜூனியர் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் என இரு பட்டங்களையும் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

1995-ம் ஆண்டு உலக தட கள போட்டியில் சீனியர் பிரிவில் பங்கேற்ற போல்டன் 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் பந்தயங்களில் வெண்கலம் வென்றார்.

1998-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.88 வினாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்தார். இந்தச் சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை.

2000-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டரில் வெள்ளியும், 200 மீட்டரில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் 4 பதக்கங்கள் வென்ற ஓட்டப் பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நமீபியாவின் பிராங்கி பிரெடெரிக்ஸ், கார்ல் லூயிஸ், போல்டன் ஆகியோர் மட்டுமே இந்தச் சிறப்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2002-ம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றில் போல்டனின் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் முன்புபோல் விரைவாக ஓடமுடியவில்லை. இதையடுத்து ஓட்டப் பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்ற போல்டன், என்பிசி உள்ளிட்ட பிரபல விளையாட்டு சேனல்களில் தட கள விமர்சகர், வர்ணனையாளராக பணியாற்றினார்.

2006-ம் ஆண்டு டிரினிடாட் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி சார்பில் செனட்டராக பதவியேற்றார். ஓராண்டு காலம் அவர் செனட்டராக பதவி வகித்தார். "ஓன்ஸ் இன் ய லைப் டைம்: போல்டன் இன் பஹ்ரைன்' என்ற திரைப்படத்துக்கு தானே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டார்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum