அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தோமஸ் அல்வா எடிசன்

Go down

தோமஸ் அல்வா எடிசன் Empty தோமஸ் அல்வா எடிசன்

Post by Admin Sat Dec 11, 2010 3:31 am

தோமஸ் அல்வா எடிசன் அமெரிக்கா ஒஹாயோ மாநி லத்தில் மிலான் எனும் ஊரில்11.02.1847ம் ஆண்டு பிறந்தார். வாத்து முட்டையை அடைகாத்த அந்த ஐந்து வயதுச் சிறுவன்தான் பிற்காலத்தில் மிகப்பெரிய புகழ்பெற்ற விஞ்ஞானி யானார். தோமஸ் அல்வா எடிசன் எதையும் ஆராய்ந்து பார்த் துத்தான் ஏற்றுக் கொள்வது என்ற கொள்கை ஐந்தாவது வய திலேயே வெளிப்பட்டதற்கான சான்றுதான் வாத்து முட்டை அடைகாத்த நிகழ்ச்சியாகும்.

தோமஸ¤க்கு ஏழாவது வயது வந்தபோது அவரது பெற்றோர் போர்ட் ஹ¤ரானுக்கு குடிபெயர்ந்தனர். வீட்டு அரு கிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு சென்ற பெற் றோரை ஆசிரியர் பல கேள்விகளைக் கேட்டு குழப்பத்தில் ஆழ்த்தினார். இறுதியில் பையனுக்கு பிறப்பிலிருந்தே தலை இப்படித்தான் இருக்கிறதா எனக்கேட்ட அந்த ஆசிரியருக்கு தக்க பதில் சொன்ன தாயின் மீது கோபம் கொண்டார்.
வகுப்பில் தோமஸ் ஆசிரியரிடம் பல கேள்விகள் கேட் டான். சில கேள்விகளுக்கு வகுப்புஆசிரியரால் கூட பதில் சொல்ல முடியாது போனது. ஒருநாள் பள்ளிக்கு வந்த ஆய் வாளரிடம் தோமஸைக்காட்டி மூளை வளர்ச்சியடையாத பையன், கவனக்குறைவுள்ளவன் மண்டு எனக் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த தோமஸ் அழுதுவிட்டான். தன் தாயிடம் நடந் ததைக் கூறி இனி பாடசாலைக்குப் போகமாட்டேன் எனக் கூறிவிட்டான்.
அன்றிலிருந்து தன் தாயிடமே கற்று வந்த தோமஸ¤க்கு இலக்கியத்தில் அதிக ஆர்வம்ஏற்பட்டது. இரசாயனப் புத்தகங்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தான். பெற்றோரிடம்அதிகமாக கேள்விகள் கேட்கும் பழக்கம் தோமஸிடம் காணப் பட்டது. இரசாயனப் புத்தகங்களைப் படித்த தோமஸ் அதனை வீட்டிலிருந்தே செய்து பார்க்க முடிவு செய்தான். பரிசோத னைகளுக்காக ஓர் அறையும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அந்த அறையில் கண்டபடி கிடந்த இரசாயனப் பொருட்களைக் கண்டு அவனைக் கண்டித்தார் தாயார். பின் அவனுக்காக ஒரு அலுமாரியையும் வாங்கிக் கொடுத்தார். அதில் இருநூறுக்கு மேற்பட்ட இரசாயன சேர்க்கைகளை அடுக்கி வைத்திருந்தார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது ஆராய்ச்சி யைத் தொடர்ந்தார். எதையும்தீவிரமாகச் சிந்திக்கும் தோமஸ் உள்ளூர் செய்திகளை சூடாகத்தரும் பொருட்டு வீக்லிஹெரா ல்ட் என்ற வாராந்த பத்திரிகையை வெளியிட்டார்.

பத்திரிகை ஆசிரியராகவும், நிருபராகவும், அச்சுக்கோர்ப்ப வராகவும், வெளியிடுபவராகவும்,விற்பனையாளராகவும் தான் ஒருவனாக நின்று செயற்பட்டதுடன் அச்சடிக்கும் இயந்திரமொன்றை ரயில் பெட்டியொன்றில் நடத்தினார். ஒரு பதினைந்து வயதுப் பையன் பத்திரிகை ஆசிரியராக இருந் ததை லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெகுவாகப் பாராட்டியது.
பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தாலும் அவரது கண்டு பிடிப்பு ஆர்வம் மட்டும்குறையவில்லை. முதலில் மின்குமி ளைக் கண்டுபிடித்தார். தந்திக்கலையின் அடிப்படையான மார்ஸ் குறியீட்டைக் கையாள்வதில் நன்கு திறமைபெற்ற தோமஸ் அல்வா எடிசன் கண்டு பிடித்த கருவிதான் பின்னா ளில் நான்குமடித் தந்தி முறையை கண்டுபிடிக்க உதவியது. 11 நாட்களுக்குள் ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய வேண்டும். ஆறு மாதகாலப்பகுதிக்குள் ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியாக வேண்டும் அதுவே அவரது திட்டமாகும்.

எடிசன் வெறும் விஞ்ஞானியாக, புது அறிவியல் தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பவராகமட்டுமல்லாது அந்தத் தொழில்நுட்பங்களை மக்கள் பயன்படுத்தும் பொருளாகவும்மாற்றினார்.
இன்றைய தொழில்வாண்மையாளர்கள் பலருக்கு எடிசன் ஒரு மூத்த முன்னோடியாவார்.கட்டடங்களை கட்ட தேவைப் படும் மூலப்பொருளான சீமெந்து , மின்சாரம், மின்விளக்கு,ஃபோனோகிராப் கருவி போன்றவற்றை கண்டுபிடித்தார். இன் றைய வோக்மேன், டேப் ரெகோடர்கள், சிடி பிளேயர்கள் ஆகிய கருவிகளுக்கு முன்னோடியான ஃபோனோகிராஃப்,அசையும் படத்தைக் கண்டுபிடித்தார். இன்று அதன் குழந்தையான சினிமா, தொலைக்காட்சி நம்மை முழுமையாக ஆளுமை செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத்
தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.

மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்குவிற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி
செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப்
பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார்.

எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல...படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.

அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின்
நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் ஆல்வா எடிசன்.
தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என
ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத்தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான்.

உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை
அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே
இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’
பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!

1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து
ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பைத, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த
தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.
தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன்
பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத
இவரது தன்மையே!
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum