அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்

Go down

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் Empty மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்

Post by Admin Sat Dec 11, 2010 4:04 am


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson), ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.

1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.

பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.

2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார். அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
'கிங் ஆஃப் பாப்' எனப் புகழப்பட்ட ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜாக்சன் குடும்பத்தில் மைக்கேல் ஜாக்சன் ஏழாவது குழந்தையாவார்.

அவரது Off the Wall (1979) Thriller (1982) Bad (1987) Dangerous (1991) and HIStory (1995) ஆகிய 5 இசை ஆல்பங்கள் உலகிலேயே அதிக அளவில் விற்று சாதனை புரிந்தன.
பல்வேறு கின்னஸ் சாதனைகள் புரிந்துள்ள மைக்கேல் ஜாக்சன் 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலக பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கூடைப்பந்து ரூ. 1 கோடிக்கு மேல் ஏலத்தில் போனது.
கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் கையெழுத்திட்ட அந்தப் பந்து சுமார் ரூ. 26, 664-க்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சீனாவில் உள்ள மக்காவில் நடைபெற்ற ஏலத்தில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 435 பிரபலங்களின் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

இதன் மூலம் ரூ. 13,34,09,78 கிடைத்துள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ஹ்ஸ்டோரி என்ற ஆல்பத்தின் விளம்பர வீடியோவில் மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த கருப்பு கற்கள் பதித்த கையுறையும், கை வளையும் ரூ. 79,99,254 -க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

'பீட் இட்' மேல் சட்டை எதிர்பார்த்ததைவிட 20 மடங்கு அதிகமாக ரூ. 69,32,686-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

தனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீதி ரசிகர்களின் விழும்பல்களால் நிரம்பி வழிகிறது.

வெற்றிகள், சர்ச்சைகள், மகிழ்ச்சி, சோகம், இயலாமை, நிராகரிப்பு என எல்லாவிதமான உணர்வுகளின் பாதைகளுக்குள்ளும் நடைபயின்று வந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் பயணம்.

ஐந்தாவது வயதில் வறுமையின் கருப்புப் பிடியில் தனது நான்கு சகோதரர்களுடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்த மைக்கேல் பின்னாளில் உலகையே தனது மந்திர அசைவுகளாலும், இசையினாலும் ஆட்டிப் படைப்பார் என அவரே நினைத்துப் பார்த்திருக்க சாத்தியமில்லை.

சகோதரர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் நடத்திய ஜான்சன் 5 – இசைப்பயணத்திலேயே முத்திரை பதித்த ஜாக்சன், 1972ம் ஆண்டு தனியே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1982ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் தான் அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது. இது அவர் தனியே வெளியிட்ட ஆறாவது ஆல்பம்.

750 மில்லியன் இசை ஆல்பங்களை விற்றுத் தீர்த்த சாதனை படைத்தவை தான் இவரது இசை.
இசையில் எவ்வளவு புகழோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார் என அவர் மீது பல குற்றச் சாட்டுகள். இரண்டு முறை பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.

எனினும், கலைஞர்களுக்கே உரித்தான இளகிய மனசு மைக்கேல் ஜாக்சனுக்குள்ளும் இருந்தது. தனது வாழ்நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மனிதநேயப் பணிகளுக்காகச் செலவிட்டு, உலகிலேயே அதிக பணம் செலவிட்ட பாப் பாடகர் எனும் கின்னஸ் பதிவையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

புகழின் வெளிச்சம் செல்லுமிடமெல்லாம் படர்ந்தாலும் தனது குழந்தைகளை வெளிச்சத்தில் விழாமலேயே வளர்த்த சாதுர்யமும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்தது.

புனைக்கதைகளுக்கே உரிய சுவாரஸ்யத் தகவல்களால் நிரம்பி வழிந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை.

ஒரு ஆக்சிஜன் சேம்பருக்குள் படுத்து புத்துணர்வு பெற்றுக் கொள்வார் என பரபரப்புச் செய்தி ஒரு காலகட்டத்தில் வேகமாய் பரவியது, யானை மனிதனுடைய எலும்புகளை வாங்கினான் என இன்னொரு முறை கதைகள் பரவியது. எவை உண்மையோ பொய்யோ மைக்கேல் ஜான்சனும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதில்லை “ முழு உடலையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இந்த நிறம் வந்ததா ? “ எனும் கேள்விக்கு “தோல் வியாதி” என சீரியசாய் சொன்னர் ஒருமுறை.
மைக்கேல் ஜாக்சனின் இசை இழைகளை ஏகத்துக்கும் காப்பியடித்திருக்கிறார்கள் நமது இசையமைப்பாளர்கள். கூடவே அவரது நடன அசைவுகளும் பலருக்கு இன்ஸ்பரேஷனாய் இருந்திருக்கிறது.

இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கலைஞனுடைய நின்று போன இதயத்தின் மௌனமும் ஒரு சோக இசையாகவே வழிகிறது மனசின் மையத்தில்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum