அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்க முடிவு!*~*

Go down

*~*அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்க முடிவு!*~* Empty *~*அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்க முடிவு!*~*

Post by Tamilkings Tue May 03, 2011 4:29 pm

அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்க முடிவு!


*~*அஜித் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்க முடிவு!*~* Ajith%20fans-reel-2

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினம் மட்டுமல்ல, நடிகர் அஜித்தின் பிறந்தநாளும் கூட. அஜித்தின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். அதேபோல் இந்த ஆண்டும் அஜித்தின் 40வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாட தீவிரமாக இருந்தனர். ஆனால் பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்னர், தமது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அஜித். அஜித்தின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் களையிழந்தது. இதனிடையே அஜித் தமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு மன்றத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தோம் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அஜித் ரசிகர்மன்ற தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், தமிழ் திரைப்படத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அஜித், ரசிகர் மன்றத்தின் மூலம் ஏராளமான நற்பணிகளையும், உதவிகளையும் செய்துவருகிறோம். தனிமனித ஒழுக்கத்தை அறிவுறுத்தி வந்த அஜித்குமார், சமூகத்தில் நிலவும் எல்லா பிரச்சினைகளையும் மையமாக வைத்து அஜித்தின் ரசிகர் மன்றமும் அதேபோல் ஆகிவிடுமோ என்ற சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால், மன்றத்தில் உள்ளவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து பலநலத்திட்டங்களை செய்து வருகிறோம். இந்தநிலையில் அஜித் இவ்வாறு ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து இருப்பது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய எல்லா ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அஜித், தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அவரிடம் சென்று வலியுறுத்த இருக்கிறோம். 15நாட்களுக்குள் அஜித், நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். ஒருவேளை அவர் எதுவும் சொல்லாதபட்சத்தில், சிவகங்கை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக சென்னை சென்று அவரது வீட்டை முற்றுகையிட்டு எங்களது கோரிக்கையை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். மறுபரிசீலனை செய்வாரானு பொறுத்திருந்து பாப்போம்.....

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum