அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*'ஜோ'வாக ரீஎன்ட்ரியாகும் ஈஸ்வர்*~*

Go down

*~*'ஜோ'வாக ரீஎன்ட்ரியாகும் ஈஸ்வர்*~* Empty *~*'ஜோ'வாக ரீஎன்ட்ரியாகும் ஈஸ்வர்*~*

Post by Tamilkings Thu May 05, 2011 6:12 pm

'ஜோ'வாக ரீஎன்ட்ரியாகும் ஈஸ்வர்


*~*'ஜோ'வாக ரீஎன்ட்ரியாகும் ஈஸ்வர்*~* Azhagan%20azhagi%20%20Movie-reel%204

'விருந்தாளி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஈஸ்வர், அப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முகத்தையே காட்டாமல் இருந்தார். தற்போது தனது பெயரையும், கெட்டப்பையும் மாற்றிகொண்டு மறுபடியும் புதுமுகமாக அறிமுகமாகிறார். ஒரு படம் ஓடவில்லை என்றால் பெயரை மாற்றும் வியாதி நடிகைகளுக்குத்தான் இருந்தது என்றால், இப்போது நடிகர்களுக்கும் அது தொற்றிகொண்டது. முரட்டு இளைஞனாக தனது முதல் படத்தில் அறிமுகமான ஈஸ்வர், தற்போது 'ஜோ' என்று தனது பெயரை மாற்றிகொண்டு 'அழகன் அழகி' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஆருஷி நடிக்கும் இப்படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். 'மாத்தியோசி' படத்திற்குப் பிறகு நந்தா பெரியசாமி இயக்கும் இப்படத்திற்கு, சாதாரண மனிதன் ஒருவனின் கையெழுத்து எப்படி ஆட்டோகிராஃப் ஆக மாறுகிறது என்பதை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மீடியா சம்மந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தின் மூலம், தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ள ஒவ்வொரு ஆணும் அழகன் தான் என்பதையும், கனிவும் பணிவும் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் அழகிதான் என்பதையும் சொல்லியிருக்கிறார்களாம். கிரீன் சினிமா சார்பில் எஸ்.குருராஜன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 9ஆம் தேதியன்று துவங்குகிறது. பேர மாத்துனா மட்டும் படம் பிச்சுக்கிட்டு ஓடிடுமா என்ன...?

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum