அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அவுஸ்திரேலியா பலவீனமான அணிதான் : பீற்றர்சன்

Go down

அவுஸ்திரேலியா பலவீனமான அணிதான் : பீற்றர்சன் Empty அவுஸ்திரேலியா பலவீனமான அணிதான் : பீற்றர்சன்

Post by devid Wed Dec 29, 2010 10:46 am

டெஸ்ட் தொடரைச் சமன் செய்திருந்தாலும் அவுஸ்திரேலியா இன்னமும் பலவீனமான அணிதான். அவர்கள் மீண்டும் களத்தில் வசையில் இறங்கியுள்ளதைப் பார்க்கும் போது அவர்கள் பெரியளவில் மன அழுத்தத்தில் இருப்பது தெரிகிறதென்று இங்கிலாந்து வீரர் கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் பேர்த் டெஸ்டில் தோல்வியுற்றது ஒரு சிறு விக்கல் அவ்வளவே. மற்றப்படி தொடரை வெல்வது சாத்தியம்தான் என்றார் பீற்றர்சன்.

அதாவது இந்தியாவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது அவுஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றியதும் அவர்களது வசையும் அவுஸ்திரேலிய பொதுமக்களுக்கே பார்க்கச் சகிக்க முடியாத காரணத்தினால் கிரிக்கெட் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சற்றே எச்சரிக்கை மணி அடித்தது.

அது முதலே அவுஸ்திரேலியா தோல்வியுற்று வருவதாக அவுஸ்திரேலிய வீரர்கள் அமைப்புத் தலைவர் போல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக எந்த பேர்த் டெஸ்டில் தாங்கள் கோட்டை விட்டதாகக் கருதும் வசைபாடும் நடவடிக்கைகளை மீண்டும் இதேபேர்த்தில் கையாண்டு வெற்றி சாத்தியமானது என்ற தவறான அணுகுமுறையை அவுஸ்திரேலிய ஊடகங்களும் வீரர்கள் அமைப்பின் தலைவரும் உருவாக்கி வருகின்றனர். இதனையடுத்தே பீற்றர்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum