அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகக் கிண்ண கிரிக்கெட்: அதிர்ச்சி தோல்விகள்-03

Go down

உலகக் கிண்ண கிரிக்கெட்: அதிர்ச்சி தோல்விகள்-03  Empty உலகக் கிண்ண கிரிக்கெட்: அதிர்ச்சி தோல்விகள்-03

Post by VeNgAi Wed Feb 16, 2011 3:23 pm

2003 உலகக் கோப்பையில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கையை எதிர்கொண்டது கென்யா.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஒட்டியனோ 60 ரன்கள் விளாச அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை. தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அத்தபத்து 23 ரன்களும், திலகரத்னே 23 ரன்களும், டி சில்வா 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கென்ய வீரர் ஒபுயா அபாரமாகப் பந்துவீசி இலங்கை வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் இலங்கை அணி 45 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் கென்ய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. இந்த உலகக் கோப்பையில் கென்ய அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி

2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேற நேரிட்டது. லீக் சுற்றில் வங்கதேசத்திடம் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியுற்றதே இதற்கு காரணம்.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மார்ச் 17-ல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 49.3 ஓவர்களில் 191 ரன்களுக்குச் சுருண்டது.

அதிகபட்சமாக கங்குலி 66 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங் 47 ரன்கள், சேவாக் 2, உத்தப்பா 9, சச்சின் 7, திராவிட் 14, தோனி 0, ஹர்பஜன் 0, அகர்கர் 0, ஜாகீர் 15, முனாப் படேல் 15 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் ஆடிய வங்கதேசம் 48.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. லீக் சுற்றின் மற்றோர் ஆட்டத்தில் இலங்கையிடமும் இந்தியா தோல்வி கண்டதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்த உலகக் கோப்பையில் அணிகள் குறைப்பு: ஆன்டி பிளவர் எதிர்ப்பு
» கிரிக்கெட் வெற்றி இராணுவத்துக்குச் சமர்ப்பணம் என்றால் தோல்வி புலிகளுக்குச் சமர்ப்பணமா?! சரவணபவன் - இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா?! மாவை கேள்வி
» அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து
» உலகக் கோப்பையில் யூ.டி.ஆர்.எஸ். முறை அமல்
» உலகக் கோப்பைக்குப் பின் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum