அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடி ஜோக்ஸ் கடி ஜோக்ஸ்

Go down

கடி ஜோக்ஸ் கடி ஜோக்ஸ் Empty கடி ஜோக்ஸ் கடி ஜோக்ஸ்

Post by thadcha Sat Feb 26, 2011 8:20 pm

சட்டம் ஒரு இருட்டறை
"நடிகைகள் ஏன் அடிக்கடி விவாகரத்து பண்றாங்க?" அடிக்கடி கலியாண சீன்லே நடிக்கிறாங்க இல்லையா?"
"கரகாட்டக்காரியை மருமகளாக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு.." "ஏன்...?" "ஏதாவது சொன்னா புருஷனைத் தலையில தூக்கி வச்சு ஆடுறா."
"இவருகிட்டே எப்பவும் ஆரோக்கியம் இருக்குமிங்கிறீயே! இவரு யாரு?" "லைபாய் சோப் ஏஜெண்ட்!"
"இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?" "சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலதான்"
ஒருவன்: "பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?" மற்றவன்: "இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்."

பச்சைக்கிளி

"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..." "அவ்வளவு அழகா?." "இல்ல". அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."
"நந்தவனத்துக்குப் போவதாகச் சொன்ன மகாராணி, பேருந்தில் ஏறி எங்கே செல்கிறார்..?" "நந்தனம் போகிறாரோ என்னவோ..!"
"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்திவிட்டாராம்!"
"ஏம்பா! மூணு மாசத்துக்கு ஒருதடவை வீட்டை மாத்திக்கிட்டே இருக்கே?" "என்ன செய்ய?" வீட்டுக்காரியை மாத்த முடியலையே!"
"வழுக்கைத் தலையா ஒருத்தர் இருக்காரே? புது அப்பாயின்மெண்டா?" "ஆமா! நிறைய மொட்டைக்கடுதாசி வருது அதைப் பார்க்கத் தான் இந்த ஏற்பாடு!"

மூத்த 'குடி'மகன்
"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்திவிட்டாராம்!"
"அந்த நடிகை நடிப்புக்கு முழுக்குப் போடப் போறாங்களாம்..."ஏன்?" "அவங்க முழுகாம இருக்காங்களாம்"
"என்னங்க வெளியில நம்ம நாய் பயங்கரமா குரைக்குது!" "ரோட்ல போலீஸ்காரங்க யாராச்சும் போவாங்க!"
"இனிமே இந்த வீட்ல யாரும் கண்­ணீர் சிந்த மாட்டாங்க..." "ஏன்?" "டி.வி-யை வித்துட்டேன்."
"அந்த ஆளு டாஸ்மாக் பாருக்குள்ளே நுழைந்ததும் முதல் இடம் கொடுத்து மரியாதை செய்வாங்க." "ஏன்?" "மூத்த 'குடி'மகனாச்சே!"


thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum